வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
சாணார்பட்டி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கூவனூத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 27). டிப்ளமோ படித்துள்ள இவர், வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த ராஜ்குமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் நேற்று இறந்துபோனார். இந்த தற்கொலை குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.