பந்தலூரில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பந்தலூரில் கழிவுநீர் கால்வாயின் மேல் மூடி உடைந்தால் கழிவுநீர் வெளியே வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
பந்தலூர்,
பந்தலூரில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் வழியில் கொளப்பள்ளி பஜார் உள்ளது. இங்குள்ள நிழற்குடைக்கு தமிழக பயணிகள் மட்டுமின்றி கேரள பயணிகளும் பஸ் ஏற வருகின்றனர். ஆனால் அதனருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் மூடி உடைந்து காணப்படுகிறது.
மேலும் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியே வழிந்தோடுகிறது. மேலும் புதர் செடிகள் முளைத்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.
எனவே கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்து, அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.