ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 கொரோனா படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 கொரோனா படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 கொரோனா படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து குறையாமல் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு நிரம்பி வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை அரசு கலைக்கல்லூரி, அவினாசியில் தனியார் கல்லூரி, திருப்பூர் காலேஜ் ரோட்டில் மண்டபம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படுக்கைகள் கூடுதலாக அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
100 படுக்கைகள் அமைக்க முடிவு
அதன்படி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 100 கொரோனா படுக்கைகள் அமைக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி அந்த பள்ளி அறைகள் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபோல் படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களும் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது.
படுக்கைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளியில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு பணிகள் மற்றும் மதிப்பெண் பதிவேற்றும் பணி நடந்து வருவதால், விரைவில் இந்த பணிகள் முடிவுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.