கோத்தகிரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த ராட்சத மயில் மீன்
கோத்தகிரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த ராட்சத மயில் மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கோத்தகிரி,
சமவெளி பகுதிகளில் இருந்து மலை மாவட்டமான நீலகிரிக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதன்படி நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கோத்தகிரி மார்க்கெட்டுக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டது. அதில் 80 கிலோ எடை மற்றும் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மயில் மீன் இருந்தது.
அதனை வாடிக்கையாளர்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வியாபாரி வைத்து இருந்தார். இந்த மீனின் துடுப்புகள் மயிலின் தோகை போல காணப்படுவதால், மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது.
கோத்தகிரி மார்க்கெட்டுக்கு வந்த வாடிக்கையாளர்கள் அந்த ராட்சத மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.