கடமலை-மயிலை ஒன்றியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் வீணாகும் இலவம் காய்கள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் இலவம் காய்கள் பறிக்கப்படாமல் மரத்தில் வீணாகின்றன.

Update: 2021-04-24 13:23 GMT
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் இலவம் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. ஆனால் உற்பத்தி அதிகரித்த காரணத்தால் இலவம் பஞ்சு விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.100-க்கு அதிகமாக விற்பனையான இலவம் பஞ்சு தற்போது ரூ.70 வரை மட்டுமே விற்பனையாகிறது. 
இந்த நிலையில் இலவம் காய்களை மரத்தில் இருந்து பறிப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இலவம் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுகின்றனர். இதைத்தொடர்ந்து இலவம் காய்கள் மரத்திலேயே காய்ந்து வீணாகி வருகிறது. மேலும் தற்போது வெயில் அதிக அளவில் உள்ளதால் மரத்தில் காய்ந்த இலவம் காய்கள் தானாக வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் காற்றில் பறந்து வீணாகி வருகிறது. 

மேலும் செய்திகள்