ஆட்டோ மீது லாரி மோதி பால் வியாபாரி பலி
ஆட்டோ மீது லாரி மோதி பால் வியாபாரி பரிதாபமாக பலியானார்.
திருமங்கலம்,ஏப்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் சிறிய ஆட்டோ மூலம் பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை வழக்கம்போல் பால் வினியோகிக்க ஆட்டோவில் சென்றார். எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்குள்ள வீடுகளுக்கு பால் வினியோகித்தார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை எடுக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.