கண்ணனூர் ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
சேத்துப்பட்டில் கண்ணனூர் ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் கண்ணனூர் ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி 18-வது வார்டு பகுதியில் கண்ணனூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாகவும் சீேதாஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் ஏரியில் இருந்த ஜிலேபி வகை மீன்கள் செத்து மிதந்தன. துர்நாற்றம் காரணமாக அந்த பகுதி வழியாக சென்றோர் கடுமையாக அவதிப்பட்டனர்.
இதனையடுத்து சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், சுகாதார மேற்பார்வையாளர் சோமு ஆகியோர் பார்வையிட்டு செத்து மிதந்த மீன்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர.
அதன்படி 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீன்களை அகற்றி டிராக்டர் மூலம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.