ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓட்டல் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,ஏப்
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 60). இவர் ஓட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக வெங்கடாசலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பேரையூர் அருகே ஜம்பலபுரத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்த அவர் அங்குள்ள கண்மாய் கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.