செங்கல்பட்டில் 5 ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் வீணாகும் ஆம்புலன்ஸ்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செங்கல்பட்டில் 5 ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் வீணாகும் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லை, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இல்லை என பல்வேறு புகார்கள் உள்ள நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வீணாக நிற்கிறது
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் மழையிலும் வெயிலிலும் வீணாக உள்ளது.
இந்த ஆம்புலன்ஸ்களை பழுது நீக்கி ஆம்புலன்ஸ் பற்றாகுறை உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.