போலி டாக்டர் கைது

சோளிங்கரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-04-24 11:59 GMT
சோளிங்கர்

சோளிங்கரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். 

அதிரடி சோதனை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னிய தெருவில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை மையம் நடத்தி வருவதாக அரசு மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சோளிங்கர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்வப இடத்துக்கு விரைந்து சென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அந்தச் சிகிச்சை மையத்தில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் பி.கே.ராயன் (வயது 44) என்றும், அவர் டாக்டருக்கு படிக்காமல், டிப்ளமோ ஆயுர்வேதிக் படித்து விட்டு, சிகிச்சை மையம் நடத்தி, அங்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவச் சிகிச்சை செய்து வந்ததும் தெரிய வந்தது. அந்தச் சிகிச்சை மையத்தில் வைத்திருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

இதையடுத்து போலி டாக்டர் பி.கே. ராயனை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த மருத்துவச் சிகிச்சை மையத்துக்கு சீல் வைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்திவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்