திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சம்: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 807 பேர் பாதிப்பு - 4 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக நேற்று ஒரே நாளில் 807 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக உச்சபட்சமாக 807 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 54 ஆயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தொம்பரை (வயது65). கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் நகரில் வசித்து வந்த பாலசுந்தரம் (75), கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்த சேகர் (59) ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேற்கண்ட 3 பேரும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமையில் சுகாதார துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டியில் நேற்று 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களில் 48 ஆயிரத்து 999 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதில், 4 ஆயிரத்து 266 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 747 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.