கும்மிடிப்பூண்டி அருகே, கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம்-செல்போன் பறிப்பு - வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம்-செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனுசுக் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே மேம்பாலம் அருகே தனது லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தி முனையில் லாரி டிரைவர் தனுசுக்கிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறிதத்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அருண்குமார் (24) என்ற வாலிபரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.