காதலிக்கு வேறு நபருடன் திருமண நிச்சயதார்த்தம்: தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் , காதலிக்கு வேறு நபருடன் திருமண நிச்சயதார்த்தம்: தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-24 06:32 GMT
புதுச்சேரி, 

லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகா‌‌ஷ் (வயது 22). மினி லாரி டிரைவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து அவரை திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் பிரகாஷ் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அவர்கள், தங்கைக்கு பின்பு திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு பிரகாஷ், அந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

இதற்கிடையே காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த பிரகா‌‌ஷ் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரகா‌‌ஷ், தான் காதலித்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், ‘இனிமேல் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நான் இருக்க மாட்டேன். நீ உன் விருப்பபடி சந்தோ‌‌ஷமாக இரு’ என தகவல் அனுப்பி விட்டு தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்