ஊஞ்சலூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது
ஊஞ்சலூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஊஞ்சலூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூலித்தொழிலாளி
ஊஞ்சலூரை அடுத்த பாசூர் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). கூலித்தொழிலாளி.
இவர் நாமக்கல் மாவட்டம் மோளகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த மாணவியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பாசூரில் கடந்த 2 மாதங்களாக குடும்பம் நடத்தியதாகவும் தெரிகிறது.
கைது
இந்த நிலையில் இதுபற்றி ஈரோடு ‘சைல்டு லைன்’ அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த அமைப்பினர் இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பிரியாதேவிக்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரி பிரியாதேவி விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், ‘அந்த சிறுமிக்கு 12 வயது என்பதும், அந்த சிறுமியை லட்சுமணன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும்,’ தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர்.