கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் தொழிலாளி தற்கொலை

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-04-24 00:53 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி. லோகநாதனுக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.

எனவே தனக்கு கொரோனா தொற்றாக இருக்குமோ? என பயந்த லோகநாதன், விரக்தியில் இருந்து வந்தார்.

நேற்று அதிகாலை லோகநாதன் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்