வீரபாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வீட்டில் திருட்டு

தி.மு.க. வேட்பாளர் வீட்டில் திருட்டு;

Update: 2021-04-23 22:24 GMT
சேலம்:
வீரபாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் டாக்டர் தருண். இவர், தனது குடும்பத்தினருடன் சேலம் ரெட்டியூர் அழகாபுரம் ஆர்.டி.நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறிய சத்தம் கேட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, குழாயில் பொருத்தப்பட்டிருந்த 4 பித்தளை குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும், மர்ம நபர்கள் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராவை உடைத்து, பக்கத்து வீட்டில் வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பித்தளை குழாய்களை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்