கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50), கொத்தனார். இவர் சம்பவத்தன்று 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் கூடமலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேல்முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.