கட்டிட தொழிலாளி தற்கொலை
பாப்பான்குளம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.https://stat.dailythanthi.com/IntegratedAdmin/CMS/Images/submit1.gif
கடையம்:
பாப்பான்குளம் அருகே உள்ள துப்பாக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நயினார் (வயது 44). கட்டிட தொழிலாளியான இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நயினார் தினமும் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாரியம்மாள் கோபித்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் வெறுப்படைந்த நயினார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.