சங்கரன்கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-23 21:38 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ஏராளமான ஆண்கள், பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் வேலை என சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி அனுபமா தெரிவித்தார். இதை கண்டித்து இருமன்குளத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வட்டார வளாச்சி அலுவலர் கூறுகையில், “தற்போது கொரோனா 2-ம் அலை பரவி வரும் காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்கள் வேலை செய்யும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதன்பேரில் அவர்களின் நலனுக்காக அனைவரையும் தடுப்பூசி போட்டபின் பணிக்கு வந்தால் அவர்கள் உடல்நலம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற நல்லெண்ணத்தின் பேரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் தடுப்பூசியின் மீதுள்ள தவறான எண்ணத்தின் காரணமாக அதை போடாமல் தவிர்க்கின்றனர். அனைவரும் தடுப்பூசி போட்டால் தான் தொற்றின் பரவலை குறைக்க முடியும்” என்றார்.

மேலும் செய்திகள்