கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே மடத்தச்சம்பாடு ஆலமரத்து முத்தாரம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி சுகுமார், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.