சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.;

Update: 2021-04-23 20:34 GMT

சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் தெப்ப உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்று கோவிலிலிருந்து சிறப்புஅலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைவார். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தெப்பத்தில் எழுந்தருள்வார்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று இரவு அபிஷேக அம்பாள் மண்டபம் அருகே உள்ள வசந்த மண்டபத்தில் சிறிய அளவில் தண்ணீரை தேக்கி தெப்பம்போல் கோவில் நிர்வாகம் அமைத்திருந்தது. அதில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் கோவிலை வலம் வந்துஅருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்