சிறை வார்டர், போலீசார் உள்பட 320 பேருக்கு புதிதாக கொரோனா; பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு
திருச்சி மாவட்டத்தில் சிறை வார்டர், போலீசார் உள்பட 320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் சிறை வார்டர், போலீசார் உள்பட 320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.
320 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் திருச்சி மத்திய சிறை வார்டர், சிறை ஆஸ்பத்திரி செவிலியர், போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஸ்ரீரங்கம் போலீஸ் ஏட்டு உள்பட 7 போலீசார் என மொத்தம் 320 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் ஆஸ்பதிரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 20,541 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 2,792 பேர் உள்ளனர். 215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 17,549 ஆகும்.
பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 81 வயது மூதாட்டி கடந்த 10 நாட்களாக தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.
நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக 4 கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.