கவுந்தப்பாடி அருகே கொேரானா விழிப்புணர்வு
கவுந்தப்பாடி அருகே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்க பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர்களின் அறிவுரைகளின்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், கடைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், கடைக்கு வரும் பொதுமக்களை முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்த 50 நபர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.10000/- விதிக்கப்பட்டது, அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பழனியப்பன் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் பணியாளர்கள் பிரியா, சாந்தி, பாலமுருகன், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
---