கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானாா்கள்.;
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 307 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 209 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. நேற்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 312 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 2 பேர் பலியானார்கள். இதன் விவரம் வருமாறு:-
சிதம்பரத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 57 வயதுடைய ஆண் காஞ்சீபுரம் தனியார் மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் பலியானார்கள். கொரோனா பாதித்த 940 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களிலும், 526 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 269 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 47 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.