பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் தரிசனம்
பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் தரிசனம்
கன்னியாகுமரி,
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அம்மனை தரிசித்த பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,
கொரோனா காலத்தில் முதல் அலை வீசுகிறபோது எந்தவித முன் மாதிரியும் இல்லாத உலகமே அச்சுறுத்தலில் இருக்கிற போது தன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தமிழக மக்களின் நலனுக்காக செயல்பட்டவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.