அழுகிய நிலையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்
மதுரை காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,ஏப்
மதுரை காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர்
மதுரை திடீர்நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் போலீஸ்காரர் கணேசன் (வயது 45). இவர் மதுரை கீரைத்துறை குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை கணேசனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, போலீஸ்காரர் கணேசன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணை
பின்னர் இது குறித்து போலீசார் கூறியதாவது:-
போலீஸ்காரர் கணேசன் கடந்த 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்துவந்ததால், பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் தனியாக வசித்து வந்த கணேசன், கடந்த 4 நாட்களாக பணிக்குச் செல்லவில்லை. மேலும் அவரது வீடு 4 நாட்களாக திறக்கப்படவில்லை என அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதும் பிரச்சினைகள் நடந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.