பொங்கல் விழா

சிங்கம்புணரியில் பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது

Update: 2021-04-23 19:45 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் நாடார் பேட்டையில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கொரோனா காரணமாக குைறவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் சாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
கரகம் அலங்கரித்தல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ மூர்த்தி பத்ரகாளியம்மன் புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
.

மேலும் செய்திகள்