நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ராஜபாளையத்தில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-23 19:38 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவள்ளி (வயது 65). இவர் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் முதியோருக்கான உதவித்தொகை உங்களுக்கு வந்துள்ளதாகவும், அதற்காக நீங்கள் அதிகாரி முன்பு  கையெழுத்து போட வேண்டும் எனவும் அந்த நபர் கூறினார். எனவே தாங்கள் நகையை கழற்றி வைக்கும் படி கூறியுள்ளார். இதை நம்பிய சுந்தரவள்ளி தான் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த நபர் ஒரு பேப்பரில் அந்த நகையை மடித்து மூதாட்டி கையில் கொடுத்தார். இங்கேயே நில்லுங்கள். அதிகாரியை அழைத்து வருகிறேன் என்று கூறி அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சுந்தரவள்ளி தான் வைத்திருந்த பேப்பரை பிரித்து பார்த்த போது அதில் சங்கிலி இல்லாமல் வேர்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரவள்ளி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகையை திருடி ெசன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்