ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.;
மதுரை,ஏப்
மதுரையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்
மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 6 ஆயிரத்து 139 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 320 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 220 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 180 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 23 ஆயிரத்து 180 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3062 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
கொரோனா பரிசோதனை
மதுரையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையும் அதிக அளவில் செய்யப்படுகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 6,520 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மதுரை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 1190 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 175 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 1111 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 280 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.