காருக்கு தீ வைத்தவர் கைது

தளவாய்புரம் அருகே காருக்கு தீவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-23 19:25 GMT
தளவாய்புரம், 
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் ரூபன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் தனது காரில் சேத்தூர் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகில் உள்ள தனது தென்னந்தோப்பிற்குசென்றார். தோப்பிற்கு சென்று விட்டு திரும்பி வரும்பொழுது அவரது கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே இதுபற்றி சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபாளையம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனையடுத்து சேத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் சேத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையா (56). இவர் கார் உரிமையாளர் ரூபனின் பெரியம்மா மகன் என்பதும், இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே இருந்த சொத்து பிரச்சினையின் காரணமாகவும் காருக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காருக்கு தீ வைத்த கருப்பையாவை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்