பக்தர்கள் வந்தால் தாணிப்பாறையில் தடுத்து நிறுத்த போலீசார் தயார் நிலை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சதுரகிரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்தால் தாணிப்பாறையில் தடுத்து நிறுத்த போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2021-04-23 19:22 GMT
வத்திராயிருப்பு, 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சதுரகிரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்தால் தாணிப்பாறையில் தடுத்து நிறுத்த போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 
 சுந்தரமகாலிங்கம் கோவில் 
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ளது. 
இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் மலை ஏறி சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 
அனுமதி ரத்து 
இந்தநிலையில் இன்று பிரதோஷம் ஆகும். இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 
ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும்  கலெக்டர் கண்ணன் இந்த அனுமதியை ரத்து ெசய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
மேலும் மறுஉத்தரவு வரும் வரை கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். 
கண்காணிப்பு பணி 
இதையடுத்து தாணிப்பாறை அடிவார பகுதியிலும், மகாராஜபுரம் விளக்கு மற்றும் தாணிப்பாறை விளக்கு பகுதிகளிலும் அனுமதியை மீறி பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருகிறார்களா என போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
பக்தர்கள் வந்தால் தடுத்து நிறுத்த தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்