சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆக்சிஜன் இருக்கிறதா?-கலெக்டர் ேநரில் ஆய்வு

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆக்சிஜன் இருக்கிறதா? என்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-04-23 19:21 GMT
சிவகங்கை,

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆக்சிஜன் இருக்கிறதா? என்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்."

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் வாயு உள்ளதா? என்று கேட்டறிந்தார். பின்னர். ஆக்சிஜன் வாயு உள்ள டேங்கை நேரில் பார்வையிட்டார்.  அத்துடன் தாய்சேய் நலப்பிரிவுக்கு சென்ற கலெக்டர் அங்கு சிகிச்சை பெற வந்திருந்த ஒரு பெண்ணிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்பு தடுப்பூசி போடும் பிரிவுக்கு சென்ற கலெக்டர் அங்கு 2-வது தடவை ஊசி போட வந்திருந்தவர்களிடம் தடுப்பூசி போட்டு கொண்டதால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.

கலந்து கொண்டவர்கள்

கலெக்டர் ஆய்வின் போது அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்)இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (சுகாதாரம்). யசோதாமணி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மிதின்குமார், முகமது ரபிக், டாக்டர் சூரிய நாராயணன், ஆக்சிஜன் வழங்கல் கண்காணிப்பு மருத்துவர் வைரவ ராஜா, அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு மருத்துவர்கள் ஜான் சுகதேவ், வித்யா ஸ்ரீ மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்