பக்தர்கள் இன்றி வீரஅழகர் கோவில் திருவிழா தொடங்கியது

மானாமதுரையில் பக்தர்கள் இன்றி வீரஅழகர் கோவில் திருவிழா தொடங்கியது.

Update: 2021-04-23 19:13 GMT
மானாமதுரை,

மானாமதுரையில் பக்தர்கள் இன்றி வீரஅழகர் கோவில் திருவிழா தொடங்கியது.

வீரஅழகர் கோவில்

மானாமதுரையில் பிரசித்தி பெற்ற வீரஅழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி திருவீதி உலா வருவார். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா கொரோனா பரவலையொட்டி அரசு விதிமுறைப்படி நடத்த உத்தரவு பிறப்பிக்கப்்பட்டது. இதைெதாடர்ந்து கோவிலில் வளாகத்துக்குள் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பக்தர்கள் இன்றி..

அதன்படி நேற்று பக்தர்கள் இன்றி வீரஅழகரின் திருக்கரங்களில் காப்பு அணிந்து சித்திரை திருவிழா தொடங்கப்பட்டது. சாமி புறப்பாடு, எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டும் தடை செய்யப்பட்டு உள்ளது.
கோவில் உள்பிரகாரத்திலேயே சாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு தான் கொரோனா காரணமாக சித்திரை திருவிழாவை பார்க்கமுடியவில்ைல. அது போல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவை பார்க்க முடியாமல் போய் விட்டதே என பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்