கரூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் மேலும் 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
70 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் 12 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், காந்திகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர், புகளூரை சேர்ந்த 60 வயது முதியவர், மலைக்கோவிலூரை சேர்ந்த 54 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 41 வயது ஆண், வெள்ளியணையை சேர்ந்த 34 வயது வாலிபர், க.பரமத்தியை சேர்ந்த 30 வயது பெண், தொழிற்பேட்டையை சேர்ந்த 50 வயது பெண், 58 வயது ஆண்.
குளித்தலை
குளித்தலையை சேர்ந்த 48 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 37 வயது ஆண், தவிட்டுபாளையத்தை சேர்ந்த 24 வயது பெண், வையாபுரி நகரை சேர்ந்த 21 வயது பெண், 41 வயது ஆண், பள்ளப்பட்டியை சேர்ந்த 60 வயது முதியவர், வெண்ணைமலையை சேர்ந்த 50 வயது ஆண், 40 வயது ஆண், சோமூரை சேர்ந்த 67 வயது முதியவர், கடவூரை சேர்ந்த 33 வயது வாலிபர்.
வெள்ளாளப்பட்டியை சேர்ந்த 43 வயது ஆண், மணல்மேட்டை சேர்ந்த 25 வயது பெண், 5 வயது சிறுவன், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 25 வயது பெண், உப்பிடமங்கலத்தை சேர்ந்த 59 வயது ஆண், ராயனூரை சேர்ந்த 30 வயது வாலிபர், புலியூரை சேர்ந்த 36 வயது ஆண் உள்பட 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.