காப்பக்கத்தில் இருந்து சிறுமி மாயம்
காப்பக்கத்தில் இருந்து சிறுமி மாயம் ஆனார்.
குளித்தலை
வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் குளித்தலை காவிரிநகர் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் இருந்துவந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற சவுந்தர்யா மீண்டும் வரவில்லை. இதுகுறித்து அந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.