கோவையில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

கோவையில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

Update: 2021-04-23 16:57 GMT
கோவையில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்
கோவை, ஏப்.24-

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் முதல் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி பேடப்பட்டது. 
ஆனால் தேவைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 

இதையடுத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு மையங்கள் போதிய தடுப்பூசி இல்லாததால் மூடப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து 46 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவை வந்தன. 

இதில் 19 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் வேகமெடுத்து உள்ளது. 

இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சீதாலட்சுமி நகர்ப்புற மையத்தில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். 

இவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் ஒருவர்பின் ஒருவராக தடுப்பூசி 
போடப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரதுறையினர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சேர்த்து 168 தடுப்பூசி போடும் மையங்கள் உள்ளன. இதில் அரசு மையங்களின் எண்ணி க்கை 93 ஆகும். முதற்கட்டமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 19,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவதால் 26 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் கூடுதல் தடுப்பூசிகள் கோவைக்கு கேட்டு உள்ளோம். விரைவில் வழங்குவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்