போலீசாருக்கு நீராவி வைத்தியம்
வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போலீசாருக்கு நீராவி வைத்தியம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு நீராவி வைத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைக்காரன், வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் நீராவி வைத்தியம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.