போடியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் சாலைமறியல்

போடியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.;

Update: 2021-04-23 15:23 GMT
போடி:
போடி நகராட்சி 32-வது வார்டு பகுதியில் இந்திரா நகர் காலனி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடிநீருடன் சாக்கடை கலந்து தண்ணீர் கலங்கலாக வருகிறது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு ெசல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்