ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற கோத்தகிரி மாணவர்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஆன்லைன் மூலம் நடந்த மாநாட்டில் கோத்தகிரி மாணவர் பங்கேற்றார்.

Update: 2021-04-23 15:14 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காக்காசோலையை சேர்ந்தவர் பாக்கியராஜன். கூலி தொழிலாளி. இவரது மகன் ராகுல்(வயது 13). கேர்க்கம்பை அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கோத்தகிரி அக்கறை அறக்கட்டளையின் குழந்தை உரிமை ஆர்வலராக உள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஆன்லைன் மூலம் குழந்தைகளின் உரிமைகள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சார்பில் ராகுல் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை உரிமைகள் என்ற தலைப்பில் பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். 

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு அவர் பெருமை சேர்த்து உள்ளார். தன்னை வனங்களின் சகோதரர் என்று அழைத்து கொள்ளும் ராகுல், மாநாட்டில் குழந்தைகளின் சுற்றுச்சூழல் உரிமையை அவர்களுக்கு வழங்கி எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்ற வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்