கோத்தகிரி அருகே உலக புத்தக தின நிகழ்ச்சி
கோத்தகிரி அருகே உலக புத்தக தின நிகழ்ச்சி நடைபெற்றது.
கோத்தகிரி,
உலக புத்தக தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நூலகம் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு கிராமத்தில் நேற்று மாலையில் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை நீலகிரி மாவட்ட நூலகர் ரவி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, புத்தக வாசிப்புதான் படைப்பாளிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகளை உருவாக்குகிறது. வாசிப்பு பழக்கம் இருக்கும் குழந்தைகள் வாழ்க்கையில் தங்களுக்கு விருப்பமான துறையில் சாதிக்கின்றனர். தற்போது குழந்தைகள் தங்களது நேரத்தை அதிகளவில் செல்போன் மற்றும் கணினியில் செலவிடுகின்றனர்.
இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதற்கு தீர்வாக புத்தக வாசிப்பை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.