மின்சாரம் தாக்கி பெண் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மின்வேலி அமைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மின்வேலி அமைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கியது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் சாலையூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் சென்னை ஏர்போர்ட்டில் டெபுடி ஜெனரல் மேனேஜராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 66). ரங்கசாமி சென்னை பெருங்களத்தூரில் உள்ள மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார். ராஜகுமாரி சிறுநாத்தூரில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரது நிலத்தில் சுப்பிரமணி அவரது மகன் சுரேஷ் ஆகியோர் பயிரிட்டு வந்துள்ளனர், எலி தொல்லையை கட்டுப் படுத்துவதற்காக நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் நிலத்தில் மின்சாரவேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் நிலத்திற்கு சென்ற ராஜகுமாரி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.