சிறுமி விழுங்கிய 5 ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுமி விழுங்கிய 5 ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.

Update: 2021-04-23 13:13 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுமி விழுங்கிய 5 ரூபாய் நாணயம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள குபேரப்பட்டினத்தை சேர்ந்தவர் போஜன். இவருக்கு தனுசியா (வயது 3½) என்ற மகள் உள்ளாள். நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி தனுசியா 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டாள். 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை, சிறப்பு நிபுணர் டாக்டர் சிந்துமதி, டாக்டர் ராஜசெல்வம், மயக்க மருந்தியல் டாக்டர் திவாகருடன் கலந்து ஆலோசித்து அச்சிறுமி விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி ஸ்கோப் முறையில் வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

சுமார் 5 மணி நேரம் போராடி சிறுமி விழுங்கிய நாணயத்தை டாக்டர்கள் அகற்றினர். 

சிறுமி விழுங்கிய நாணயத்தை அகற்றிய டாக்டர்களை மற்ற டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்