செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி - போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்திருப்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் பஸ் நிலையத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏ.டி.எம் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. பணம் கொள்ளை போகவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.