ஆவடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
ஆவடி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த கவரபாளையம் தனலட்சுமி நகரில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. அர்ச்சகர் சீனிவாசன், நேற்று மாலை கோவிலுக்கு வந்தார். அப்போது மர்மநபர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.