மேட்டூரில், ஓடும் பஸ்சில் 20 பவுன் நகை திருடிய 2 பெண்கள் கைது
20 பவுன் நகை திருடிய 2 பெண்கள் கைது
மேட்டூர்:
மேட்டூர் சும்மன்ஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் யூசுப் பாஷா. இவருடைய மனைவி ரெஜினா பானு. இவர் ஈரோட்டில் இருந்து தனியார் பஸ்சில் மேட்டூருக்கு வந்தார். அப்போது தான் அணிந்து இருந்த 20 பவுன் நகைகளை ஒரு மணிப்பர்சில் வைத்து, அதனை கைப்பையில் வைத்துக்கொண்டு பயணம் செய்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, கைப்பையில், நகை வைத்திருந்த பர்சை காணவில்லை. இது குறித்து அவர் மேட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஓடும் பஸ்சில், ரெஜினா பானுவிடம் இருந்த நகையை திருடியதாக ஜோலார்பேட்டையை சேர்ந்த கோகிலா (வயது 35), நந்தினி (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.