ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் முககவசம் அணியாத 55 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத 55 பேருக்கு அபராதம்
ஆத்தூர்:
ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நகராட்சி முழுவதும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாத 13 பேருக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். அதேபோல முககவசம் அணியாத 12 பேருக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலித்தனர். இதேபோல நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் முககவசம் அணியாத 43 பேருக்கு ஆணையாளர் சேகர், மொத்தம் ரூ.8 ஆயிரத்து 600 அபராதம் விதித்தார்.