மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் மனித கால் கிடந்ததால் பரபரப்பு
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் மனித கால் கிடந்ததால் பரபரப்பு.
மேட்டூர்,
மேட்டூரில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்குள்ள பிரேத பரிசோதனை கூட ஜன்னல் சிலாப்பின் மீது மனித கால் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்து ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அச்சம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளவரசி கூறுமபோது, பிரேத பரிசோதனைக்காக அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஒரு உடலை போலீசார் கொண்டு வந்தனர். அந்த உடல் மற்றும் கால் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை உலர வைப்பதற்காக பிரேத பரிசோதனை கூடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஜன்னல் சிலாப்பின் மீது வைத்தனர். அந்த கால் உலர்ந்தவுடன் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, அதில் இருந்து மாதிரிகள் எடுத்து ரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.