கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத
பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
திருச்சி, ஏப்.23-
திருச்சி தில்லைநகர் பகுதியில் செயல்பட்டு வந்த பேக்கரி கடையில் ஊழியர் ஒருவர் கையுறை, முககவசம் இல்லாமல் விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி கடை ஊழியர்களை எச்சரித்ததோடு, முககவசம், கையுறை இன்றி ஊழியர்கள் பணியாற்றியதால் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.