சத்தியமங்கலத்தில் திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமி கடத்தல்; போக்சோவில் கட்டிட தொழிலாளி கைது

சத்தியமங்கலத்தில் திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-22 21:36 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
கட்டிட தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சிதம்பரத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து திருமண ஆசை வார்த்தைக்கூறி அந்த சிறுமியை சிதம்பரம் கடத்தி சென்றுவிட்டார். 
கைது
இதற்கிடையே அந்த சிறுமியின் பெற்றோர், தங்களுடைய மகளை காணவில்லை என சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி்னர். விசாரணையில், ‘சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிதம்பரம் கடத்தி சென்றுவிட்டதாகவும், பின்னர் அந்த சிறுமியை அவர் பெங்களூரு பகுதியில் விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டு சத்தியமங்கலத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் சிதம்பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்