குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டு
குழந்தையை மீட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.;
திருச்சி,
குழந்தையை மீட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி-சென்னை ஒய் ரோடு நெ.1 டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் பெற்றோரை தவற விட்ட 2 வயது ஆண் குழந்தையை மீட்டு அவருடைய பெற்றோரிடம் கொள்ளிடம் போலீசார் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயலை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேற்று கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு சாந்தா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.